ஓமலூர் அருகே, 680 கிலோ ரேசன் அரிசி கடத்தி செல்லப்பட்ட மாருதி ஆம்னி வேன் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
2 பேர் தப்பியோடிய நிலையில், விஜய் என்பவரை மட்டும் அப்பகுதி மக்கள் பிடித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
தாரமங்கலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் ரேசன் அரிசியை வாங்கி, விற்றுவருவதாக விஜய் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.