ஒன்றரை கோடி ரூபாய் கடனாக வாங்கிய பணத்தை திருப்பி தரவில்லை என்று கூறி 20 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்ட சேலம் சீரங்கபாளையம் பகுதியைச் சேர்ந்த மில் உரிமையாளர் ரவிக்குமாரை அஸ்தம்பட்டி போலீசார் மீட்டனர்.
ரவிக்குமாரை கடத்தவில்லை என்றும் பணம் வாங்கத்தான் அழைத்து வந்தோம் என்று அந்த கும்பல் போலீசில் தெரிவித்ததை அடுத்து சங்ககிரிக்கு சென்ற போலீசார் ரவிக்குமாரை மீட்டதோடு அவருடன் இருந்த 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.