தேனி அருகே அல்லிநகரத்தில் திருமணமான ஒன்பது மாதங்களில் கணவரை பிரிந்து தாய் வீட்டில் இருந்த பெண்ணை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட கௌசல்யா குடும்ப பிரச்சனை காரணமாக கணவர் பிச்சைமுத்துவை பிரிந்து மூன்று மாதங்களாக தாய்வீட்டில் தங்கி ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் கௌசல்யாவின் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.