செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சப்புன்னு அறைவேன்.. ராசா.. சப்.. சப்புன்னு அறைவேன்.. கோவக்கார போலீசுக்கு ஷாக்..! தலைக்கவசம் போடலைன்னு அடிச்சா எப்புடி ?

Dec 19, 2024 06:33:17 AM

இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் வந்த இளைஞர் போலீசாரை கண்டதும் நிற்காமல் தப்பிக்க நினைத்தபோது, அவரை மடக்கிப்பிடித்த போக்குவரத்து காவலர் இருவர் கண்மூடித்தனமாக கன்னத்தில் அறைந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் புகாருக்குள்ளான போக்குவரத்து காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை இரயில் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் வந்த இருவர் போலீசிடம் சிக்காமல் வாகனங்களுக்குள் மறைந்து செல்ல முயன்றதாக கூறப்படுகின்றது. அவர்களை மறித்து வாகனத்தை நிறுத்த சொன்ன போக்குவரத்து காவலர் சார்லஸ் பைக் ஓட்டிய இளைஞரின் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தார்

ஒரு முறைக்கு இரு முறை அந்த இளைஞரை காவலர் அடித்ததை அருகில் சென்ற காரில் இருந்தவர்கள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில் தலைக்கவசம் அணியாமல் அதிவேகத்தில் சென்றால் உரிய அபராதம் விதிக்கலாம், உரிய ஆவணங்கள் இல்லையென்றால் அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்யலாம், அதை விடுத்து வாகன ஓட்டியை அடிக்க போலீசாருக்கு அதிகாரமில்லை என்று போலீசார் மீது விமர்சனம் எழுந்தது.

இருவரும் சிறுவர்களாக இருந்தால் பெற்றோரை வரவழைத்து நடவடிக்கை எடுக்கலாம் மாறாக பொதுவெளியில் இவ்வாறு தாக்குவது சரியானதா? என்ற கேள்வியும் எழுந்தது. இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட காவலர் சார்லஸை ஆயுதப்படைக்கு மாற்றிய மாநகர காவல் ஆணையர் ரூபேஸ் குமார் மீனா, துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் இருசக்கரவாகன ஓட்டிகள் சட்டத்துக்காக என்றில்லாமல் தங்களின் உயிர் காக்க தலைகவசம் அணிய வேண்டும் என்பதே அனைவரின் அறிவுறுத்தலாக உள்ளது.


Advertisement
சென்னை துறைமுகத்தில் காருடன் கடலுக்குள் விழுந்த, ஓட்டுநர் உடல் மீட்பு
சாலையில் நடந்து சென்ற பெண்கள் மீது அதிவேகமாக வந்த மோதிய கார்..
ரூ.1.20 கோடியில் அங்கன்வாடி மையம், சமுதாயக் கூடம் கட்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் அடிக்கல்..
யாரோ சிலருக்கு அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம்... அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவுக்கு விஜய் கண்டனம்
பாத்திர கடையில் ரூ.75 லட்சம் திருடி விட்டு தப்பிய ஊழியர் கைது... தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்று கைது
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு டிச.20 வரை நீதிமன்றக் காவல்... போதைப் பொருள் வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் கைது
ஓலையூரில் மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த மின் ஊழியர்கள் 2 பேர் உயிரிழப்பு
ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக மாறும் பிராட்வே பேருந்து நிலையம்
''நேற்றொரு கொள்கை, இன்று ஒரு கொள்கை என தி.மு.க. செயல்படும்'' முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு மீனவ பகுதியில் இருதரப்பினரிடையே தகராறு... இருதரப்பினரிடையே மீண்டும் ஏற்பட்ட தகராறில் 7 பேரை கைது செய்த போலீசார்

Advertisement
Posted Dec 18, 2024 in தமிழ்நாடு,Big Stories,

40 சவரன் - 2 கிலோ வெள்ளி வீடு வீடாய் கொள்ளையடித்த அமாவாசை பிசினஸ் மேக்னட் ..! கோவிலில் கும்பிட்டு கைவரிசை

Posted Dec 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பை.. பைக்குள்ள பை.. எத்தனை பை..? திருட்டு சுந்தரியை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்த பெண் பயணிகள்..! அரசு பேருந்தில் தரமான சம்பவம்

Posted Dec 17, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ரெட்டை நாக்கு.. நீல கண்கள்.. உடலெல்லாம் விசித்திர டாட்டூ.. இன்ஸ்டா ஏலியன் சிக்கியது எப்படி ? மனித உடலில் மாடிபிகேசனாம்..!

Posted Dec 17, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆசையோடு ஆபீஸ் போனாப்பா.. சாலையில் கிடந்த மண்ணால்... தலை நசுங்கி சிதைந்த கொடுமை..! அடுத்தடுத்த உயிர் பலி - கலெக்டர் எச்சரிக்கை

Posted Dec 16, 2024 in Big Stories,

சூப்பர் மார்க்கெட்டில் குட் நைட், ஆல் அவுட் விற்பதா ?.. பெண் அதிகாரி திடீர் ரெய்டு..! கேள்விகளால் மடக்கிய வியாபாரிகள்


Advertisement