சென்னை சவுகார்பேட்டையில் பாத்திர கடையில் 75 லட்சம் ரூபாய் திருடிவிட்டு ராஜஸ்தான் மாநிலத்திற்கு தப்பிச் சென்ற கடை ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விமானம் மூலம் ராஜஸ்தான் சென்ற தனிப்படை போலீசார், அஜ்மீர் மாவட்டத்தில் பதுங்கி இருந்த கடை ஊழியர் லட்சுமணன் மற்றும், உடந்தையாக இருந்த கூட்டாளி ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.