செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பை.. பைக்குள்ள பை.. எத்தனை பை..? திருட்டு சுந்தரியை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்த பெண் பயணிகள்..! அரசு பேருந்தில் தரமான சம்பவம்

Dec 18, 2024 06:27:52 AM

கன்னியாகுமரி அருகே அரசு பேருந்தில் பெண்ணின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்று சிக்கிக் கொண்டதால்,  தப்பி ஓடியய திருட்டு சுந்தரியை  விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்து பயணிகள் போலீசில் ஒப்படைத்தனர்

ஓடும் பேருந்தில் 5 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்று கையும் களவுமாக சிக்கிய “திருட்டு சுந்தரி” இவர் தான்..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து மேல்மிடாலம் நோக்கிச்சென்று கொண்டிருந்த 9A என்ற அரசு பேருந்தில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்த போது பால்பண்ணை பகுதியில் வைத்து சுடிதார் அணிந்த பெண் ஒருவர் பேருந்தில் ஏறி உள்ளார்

கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர், பெண் பயணி ஒருவரின் கழுத்தில் கிடந்த ஐந்து பவுன் நகையை பறித்துள்ளார், சுதாகரித்துக் கொண்ட அந்த பயணி உடனடியாக தனது செயினை பறித்த பெண்ணின் கையை பிடித்ததாக கூறப்படுகின்றது. கையை தட்டிவிட்டு ஓடும் பேருந்தில் இருந்து தங்க சங்கிலியுடன் குதித்து தப்பிய பெண்ணை பேருந்தை நிறுத்திய பயணிகள் சிலர் விரட்டிச்சென்று பிடித்து மீண்டும் பேருந்தில் ஏற்றி சிறைவைத்தனர்.

அவரிடம் இருந்து ஐந்து பவுன் நகையை மீட்ட நிலையில் அங்கு வந்த போலீசார் இது தங்கள் காவல் நிலைய எல்லைக்குள் வராது என்று அந்தப்பெண்ணை அழைத்துச்செல்ல மறுத்தனர். அப்போது அந்த திருட்டு சுந்தரி பேருந்தில் இருந்து இறங்கி தப்பிக்க முயற்சிக்க, அவரை மீண்டும் பேருந்தில் ஏற்றினர்

அந்த பெண்ணின் ஹேண்ட் பேக்கை சோதித்த போது உள்ளே ஏராளமான பைகளை மறைத்து வைத்திருந்ததும், அவற்றில் பணம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது

சிறிது நேரம் கழித்து மற்றொரு காவல் நிலையத்தில் இருந்தும் போலீசார் வந்து விசாரித்து விட்டு, தங்க சங்கிலி பறித்த இடம் வேறு, திருட்டு பெண்ணை பிடித்த இடம் வேறு என்பதால் தங்கள் எல்லைக்குள் வராது என்று கூறிச்சென்றனர்

இதனால் அந்த திருட்டு சுந்தரியுடன் பயணிகள் பேருந்தில் நடுவழியில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து செய்தியாளர்கள் அங்கு சென்றதும், வடசேரி காவல் நிலையத்தில் இருந்து வந்த பெண் போலீசார் அவரை பேருந்தில் இருந்து இரக்கி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் சுடிதார் போட்ட அந்த திருட்டு சுந்தரி தன்னை திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகா என்று பொய்யான பெயர் மற்றும் முகவரியை கொடுத்திருப்பதை கண்டுபிடித்த போலீசார் , அவரது பின்னணியை விசாரித்து வருகின்றனர்.


Advertisement
சாதிச் சான்றிதழ் இல்லாததால் பள்ளிக்குச் செல்லாத 6 குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்த்த காவல் உதவி ஆய்வாளர்
வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால், தாயும், சேயும் இறந்ததாக குற்றச்சாட்டு
திருப்பத்தூரில் மது போதையில் தாயிடம் சண்டையிட்ட தந்தையை அடித்து கொன்ற மகன்
கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவியிடம் அத்து மீறிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
வீட்டின் கதவை உடைத்து முன்னாள் ராணுவ வீரர் வீட்டிற்குள்ளிருந்து வெளியே வர மறுத்ததால் கதவு உடைத்து கைது..
தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மீனவ மக்களின் குறை கேட்பு முகாம்... 13 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் பங்கேற்பு
காற்றாலையில் இருந்து கசியும் திரவத்தால் வாழைப்பயிர்கள் சேதம்... காற்றாலைகளால் பாதிப்பு ஏற்படுவதாக தகவல்
தி.மு.க.வுடன் ஜாபர் சாதிக்கை தொடர்புபடுத்திய பேசியதாக இ.பி.எஸ். மீது ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு பிப்.3ஆம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைப்பு
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு-வானிலை மையம்
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ரூ.23 கோடி மதிப்பில் புதிய கட்டிடம்... டைல்ஸ்கள் சரியாக ஒட்டப்படாததால் ஒப்பந்ததாரரைக் கடிந்து கொண்ட ஈஸ்வரன்

Advertisement
Posted Dec 17, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ரெட்டை நாக்கு.. நீல கண்கள்.. உடலெல்லாம் விசித்திர டாட்டூ.. இன்ஸ்டா ஏலியன் சிக்கியது எப்படி ? மனித உடலில் மாடிபிகேசனாம்..!

Posted Dec 17, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆசையோடு ஆபீஸ் போனாப்பா.. சாலையில் கிடந்த மண்ணால்... தலை நசுங்கி சிதைந்த கொடுமை..! அடுத்தடுத்த உயிர் பலி - கலெக்டர் எச்சரிக்கை

Posted Dec 16, 2024 in Big Stories,

சூப்பர் மார்க்கெட்டில் குட் நைட், ஆல் அவுட் விற்பதா ?.. பெண் அதிகாரி திடீர் ரெய்டு..! கேள்விகளால் மடக்கிய வியாபாரிகள்

Posted Dec 16, 2024 in தமிழ்நாடு,Big Stories,

பக்கத்து வீட்டில் பயங்கரன் சிறுவன் படு கொலையில் ஆட்டோ டிரைவர் சிக்கியது எப்படி? சினிமாவை மிஞ்சும் வகையில் துப்பறிந்த போலீஸ்

Posted Dec 14, 2024 in இந்தியா,Big Stories,

ரியல் புஷ்பா.. பச்ச புள்ளப்பா.. அப்பா கூட தான் வருவேன்.. அப்பாவை இறக்கி விட்ட போலீஸ்..! அல்லு அர்ஜூன் கைதுக்கு வலுக்கும் கண்டனம்..


Advertisement