சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் நடைபெற்ற மீனவ மக்களின் குறை கேட்பு முகாமில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்ரமணியன் பங்கேற்று மீனவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர்.
இதில் திருவான்மியூர், பனையூர், உத்தண்டி, ஊரூர் குப்பம், நைனார்க் குப்பம் உள்ளிட்ட 13 மீனவ பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். வலை பின்ன இடம், சாலை வசதி, சமுதாயக் கூடம், மீன் விற்பனையகம், ஐஸ் ஃபேக்டரி அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மீனவர்கள் முன்வைத்தனர்.