நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் 23 கோடிரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய கட்டிடங்களின் கட்டுமான பணிகளை எம்.எல்.ஏ ஈஸ்வரன் ஆய்வு செய்தார்.
அப்போது,ஒரு அறையின் சுவரில் ஒட்டப்பட்ட டைல்ஸ்களை நாற்காலி மீது ஏறி ஆய்வு செய்த போது டைல்ஸ்கள் சரியாக ஒட்டாததைக் கண்டு கட்டிட ஒப்பந்ததாரர் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலரைக் கடிந்து கொண்டார்.