திருச்சியில் ஏலியன் ஈமோ என்ற பெயரில் டாட்டூ ஷாப்பில் வைத்து நாக்கை இரண்டாக பிளவுப்படுத்தி பாம்பு நாக்கு போன்று மாற்றிய விவகாரத்தை விசாரிக்க மருத்துவத்துறை குழு அமைத்துள்ளது.
திருச்சி மாநகர் சுகாதார அதிகாரி டாக்டர் விஜயசந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடையின் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மருத்துவ உபகரணங்கள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், மயக்க மருந்துகள் இருவருக்கும் கிடைத்தது எப்படி ? என கேள்வி எழுந்துள்ளது.