சென்னை, மதுரவாயல் பகுதியில் கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்வதால் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர்கள் சிலர் தடுப்பு கம்பிகளின் மேல் ஏறி ஆபத்தான முறையில் கடந்து சென்றனர். தரைப்பாலத்தில் கணுக்கால் அளவு சாக்கடையுடன் வெள்ளம் செல்லும் நிலையில் அதில் இறங்கி நடக்க முடியாமல், அதே நேரத்தில் சுமார் மூன்று கிலோ மீட்டர் வரை சுற்றிக் கொண்டு கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதாலும் மாணவர்கள் ஆபத்தான குறுக்கு வழியை பின்பற்றினர்.