திண்டிவனம் அடுத்த கொஞ்சிமங்கலம் ஆற்றில் நேற்று அடித்துச் செல்லப்பட்ட மற்றொரு +2 மாணவியும் சடலமாக மீட்கப்பட்டார்.
புது குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 7 மாணவிகள் குளிக்கச் சென்றபோது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி நர்மதா, அனுஸ்ரீ ஆகிய இருவர் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதில் நேற்று மீட்கப்பட்ட மாணவி நர்மதா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்தார். மற்றொரு மாணவி அனுஸ்ரீயை தேடி வந்த நிலையில் அவரும் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.