திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உத்தமபாளையத்தில் உள்ள வட்டமலை அணைக்கு நீர்வரத்து வேண்டி, பத்தாயிரத்து எட்டு அகல் விளைக்குகளில் இலுப்பை எண்ணை ஊற்றி தீபம் ஏற்றி கிராம மக்கள் வழிபாடு நடத்தினர். கடந்த 1980ஆம் ஆண்டு பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த அணைக்கு 25 ஆண்டுகளுக்கு பிறகு 2021ஆம் ஆண்டு தண்ணீர் திறந்து விடப்பட்டதாகவும், அதன்பிறகு நீர் வரத்தின்றி அணை வறண்டு கிடப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.