கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சங்கராபுரம் அருகே கள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்குத் தாயாராக இருந்த மக்காச் சோளப் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி முளைக்கத் தொடங்கிவிட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த நிலையில் பயிர்கள் சேதம் அடைந்ததால் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.