தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கனமழையால் 800 ஏக்கர் பரப்பளவு கொண்ட எப்போதும்வென்றான் குளம் நிரம்பியதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஆதனூர் - முள்ளூர் இடையேயான தரைப்பாலம் மூழ்கியது.
இதனால் மிளகுநத்தம், அய்யர்பட்டி, வீரண்டியாபுரம், சுப்பையாபுரம், பட்டியூர், கொல்லம் பரும்பு, குளத்தூர், ஆகிய 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.