சிறுமலை பகுதியில் தொடர் கனமழையால் சாத்தையாற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே தெத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கமுத்தூர் கிராம மக்கள் கயிறு கட்டி ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.
இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டுள்ள மக்கள் தமிழக அரசு தங்களுக்கு பாலம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.