மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தென்காசி மாவட்டத்தில் நேற்றிலிருந்து பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, செங்கோட்டையில் 24 சென்டி மீட்டர் மழை பதிவான நிலையில், குளக்கரையின் ஒரு பகுதி உடைந்ததால் நகர் பகுதியில் இடுப்பளவு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
காட்டாற்று வெள்ளத்தால், வடகரை, உதயசெல்வன்பட்டி, மூன்றுவாய்க்கலில் உள்ள குடியிருப்பு மற்றும் சாகுபடி பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
குற்றாலம் பிரதான அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பாலத்தின் தடுப்புக்கம்பி உடைந்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அங்கிருந்த போலீசாரின் கண்காணிப்பு கூண்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
32 ஆண்டுகளுக்கு பின்னர், கனமழையால் தஞ்சாவூர் பத்துக்குளத்தின் கரை உடைந்ததால், தென்காசி-கொல்லம் நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கேரளாவையும், தமிழகத்தையும் இணைக்கும் இந்த சாலையில் அதிகாலை 4 மணி முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
தென்காசியில் உள்ள சங்கரநாரயணன் கோவில் வளாகம் மற்றும் உட்புறத்தில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி உள்ளது..