தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று காலை முதல் இடைவிடாது தொடர்ந்து மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கோவில்பட்டி நகர சாலைகளில் மழைநீர் ஆறாய் பாய்ந்த நிலையில், பேருந்து, லாரி, கார் போன்ற வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கின.
குறிஞ்சான் குளத்திற்கு செல்ல வேண்டிய மழைநீர் பாதையில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது.
30க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்த நிலையில், டி.வி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருட்கள் தண்ணீரில் மிதந்தன.