ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்று வட்டாரப் பகுதியில் நேற்று 2 மணி நேரத்தில் 7 சென்டி மீட்டர் மழை பதிவானது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மாவட்டத்தில் காலை முதலவே பரவலாக மழை பெய்து வந்த நிலையில் இரவில், ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கனமழை பெய்தது.