நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது கடும் உழைப்பாலும் மேன்மையான பண்புகளாலும், இந்தியத் திரையுலகின் அடையாளங்களில் ஒருவராக அவர் உயர்ந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தனது வசீகரத்தால் மூன்று தலைமுறைகளை கட்டிப் போட்டிருக்கும் ரஜினிகாந்த் பல்லாண்டுகள் நலமுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை வேண்டிக் கொள்வதாகவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.