விருதுநகர் மாவட்டம், சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு கார்த்திகை மாத பௌர்ணமி வழிபாட்டிற்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என வனத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வானிலை மையம் விடுத்துள்ள கன மழை எச்சரிக்கை மற்றும் தாணிப்பாறை பகுதியில் தொடர் மழை பெய்வதால் தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.