நாகை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கொடியாலத்தூர்,வலிவலம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில் நீரில் மூழ்கியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
ஏக்கருக்கு 25000 ரூபாய் வரை செலவு செய்த நிலையில் மழைநீர் வடியவில்லை என்றால் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் எனவும் முறையாக கால்வாய்கள் அமைத்து மழை நீர் வடிய அரசு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்