செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் கடற்கரை ஓரத்தில் புத்தர் உருவக் கொடியுடன் ஒதுங்கிய மூங்கில் மிதவை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மிதவை மீது தகரத்தில் அடைக்கப்பட்ட குடிலும், சேதமடைந்த நிலையில் புத்தர் உருவம் பொறித்த பேனரும் உள்ளன. மியான்மர் மக்களின் மிதவை போல் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.