மத்திய அரசை எதிர்ப்பது தான் தமது முதன்மைப் பணி என்று கூறிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், நெய்வேலி என்.எல்.சி நிலக்கரி சுரங்க விவகாரத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவது ஏன் என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
என்.எல்.சிக்காக கையகப்படுத்தப் பட்ட நிலங்கள் முழுவதையும் மீண்டும் உழவர்களுக்கே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.