திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான நெய் காணிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
2 ஆயிரத்து 668 அடி உயர மலையில், வெள்ளிக்கிழமை மாலை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. 11 நாள் ஒளிவீசும் மகாதீபத்துக்காக கோவில் நிர்வாகம் சார்பில் 4 ஆயிரத்து 500 கிலோ நெய் வாங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பக்தர்கள் ஒரு கிலோ 250 ரூபாய், அரை கிலோ 150 ரூபாய், கால் கிலோ 80 ரூபாய் என்ற அளவில் நெய் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.