தென்காசி மாவட்டத்துக்கு வரும் வெள்ளிக்கிழமை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகள் மற்றும் கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்குமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார்.
மழை பாதிப்புகள் குறித்த புகார்களை, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது ஆட்சியர் அலுவலகத்தையோ தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.