மதுரையில் டங்ஸ்டன் ஆலை அமையும் பகுதியில் சமணர் படுக்கை உள்ளிட்ட புராதன, தொல்லியல் சின்னங்கள் இருப்பதை திமுக அரசு மத்திய அரசுக்கு தெரிவிக்காமல் மறைத்தது ஏன்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
நாகையில் பேட்டியளித்த அவர், இத்திட்டத்திற்காக தவறான தகவல்களை திமுக அரசு வழங்கியதாகவும் குற்றம்சாட்டினார்.
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தின் பெயரை மாற்றி, கலைஞர் கைவினைஞர்கள் திட்டம் என்று ஸ்க்கர் ஒட்டி தமிழக அரசு தங்களது திட்டமாக அறிவித்துள்ளதாகவும் அண்ணாமலை விமர்சித்தார்.