நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மதுபோதையில் தொடர்ந்து தகராறு செய்து வந்ததால் தொழிலாளியை கொலை செய்ததாக மனைவி, மகன்கள், மகள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மாவடி புதூரைச் சேர்ந்த அந்தோணி தாஸ் என்பவர், அடிக்கடி மதுபோதையில் தகாத வார்த்தையில் பேசி குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 7ம் தேதி வீட்டு மாடியில் மயங்கி கிடந்த அவர் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என உறவினர்கள் நினைத்த நிலையில், விசாரணையில் குடும்பத்தினரே கழுத்தை நெறித்து கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது.