பிடிக்கப்பட்ட மாடுகளை விடுவிக்குமாறு எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுக்காமல் இருந்தால், சாலைகளில் திரியும் மாடுகளை பிடித்து அடைத்துவிடுவோம் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என சாக்கோட்டை அன்பழகன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், மாடுகளை பிடித்து அடைத்தால், எங்க மாட்டை ஏன் பிடித்தீர்கள் என பலர் சண்டை போடுவதாகவும் தெரிவித்தர்.