ஈரோடு அருகே மதுபோதையில் இருந்த தந்தை தனது மகன் மற்றும் மகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நிலையில், 4 வயது சிறுவன் 70 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த திருமலைசெல்வன் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு செய்ததால், அவரது மனைவி சுகன்யா இரண்டு குழந்தைகளுடன் கடந்த ஒரு மாதம் முன்பு தாய் வீட்டிற்கு சென்று அங்கிருந்தபடி சாயப்பட்டறையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை அங்கு வந்த திருமலைச்செல்வன் மீண்டும் தகராறு செய்து குழந்தைகள் மீது தீ வைத்ததாகவும், மகளை காப்பாற்றிய தன்னால் மகனை காப்பாற்ற முடியவில்லை என சுகன்யா தெரிவித்த நிலையில், வடக்கு காவல்நிலைய போலீசார் திருமலைச்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.