தமிழக பள்ளிகளில் 2027ம் ஆண்டிற்குள் 18,000 வகுப்பறைகள் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டப்பேரவையில் வினாக்கள் விடை நேரத்தில் தெரிவித்தார்.
பள்ளி வளர்ச்சிக்கு 7 ஆயிரத்து 500 கோடி ரூபாயில் திட்டம் கொண்டு வரப்பட்டு, 18 ஆயிரம் வகுப்பறை கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், இதுவரை 3,497 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 7756 வகுப்பறைகள், 31 ஆய்வகங்கள், 20 யூனிட் கழிவறை, 752 மீட்டர் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.