சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே நகை கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடித்துவிட்டு தப்பியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
தளவாய்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் நகைக்கடையில், 6 கிலோ வெள்ளி, 46 கிராம் தங்க நகை உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது குறித்த புகாரின் பேரில் தடயவியல் நிபுணர்களை கொண்டு போலீசார் தடயங்களை சேகரித்தனர்.
மோப்ப நாயை கொண்டு கொள்ளையர்கள் வந்து சென்ற வழியை அவர்கள் ஆய்வு செய்தனர்.