பெஞ்சல் புயல் கனமழை வெள்ளத்தால் தருமபுரி மாவட்டம் சித்தேரி மலை கிராமத்திற்கு செல்லும் சலையில் மண் சரிவு ஏற்பட்டு 80 அடி ஆழத்திற்கு பள்ளம் உருவானதால் 63 கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினர் பத்தாயிரம் மணல் மூட்டைகளை அடுக்கி பள்ளத்தை சரி செய்து சாலை அமைத்து 3 நாட்களில் மலை கிராம மக்களுக்கு போக்குவரத்து சேவையை ஏற்பாடு செய்துள்ளனர்.