திருப்பத்தூரில் தன்னை டி.எஸ்.பியின் ஓட்டுநர் எனக் கூறி மசாஜ் நிலையத்தில் 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய எல்லை பாதுகாப்புப் படை வீரர் மயில்வாகனன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் டி.எஸ்.பி நேர்மையானவர் என்பதை அறிந்த மசாஜ் நிலைய உரிமையாளர், போலீசாருக்கு ரகசியமாகத் தகவல் கொடுத்துள்ளார். விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள மயில்வாகனன், ஞாயிற்றுக்கிழமை என்பதால் மது அருந்த எண்ணிய நிலையில், பணம் இல்லாததால் இந்தக் காரியத்தில் இறங்கியதாகக் கூறப்படுகிறது.