நாகப்பட்டினத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், நம்பர் பிளேட் இல்லாத ஸ்கூட்டரில் வந்த இளைஞனை மடக்கிப் பிடித்தனர். மது போதையில் இருந்த இளைஞனின் ஸ்கூட்டரில் மது பாட்டில்களும் இருந்துள்ளன.
விசாரணைக்காக போலீசார் அழைத்தபோது, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த இளைஞன் தனது கையைக் கிழித்துக் கொண்டு ரத்தத்தை போக்குவரத்து போலீசார் மீதும் பொதுமக்கள் மீதும் தெளித்து வாக்குவாதம் செய்யத் தொடங்கினான். இதில் போலீசாரின் வெள்ளைச் சட்டை ஆங்காங்கே ரத்தக்கறையானது.
தகவலறிந்து அங்கு காவல் ஆய்வாளர் வந்தபோது, தனது கழுத்தை அறுத்துக் கொள்வதாக மிரட்டியவன், ஒருகட்டத்தில் அவரைத் தாக்க முற்பட்டான். நீண்ட போராட்டத்துக்குப் பின் போலீசார் அவனை மடக்கி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.