தி.மு.க கூட்டணியை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள் அதற்கு வி.சி.கவை ஒரு கருவியாக பயன்படுத்த முயற்சிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், ஆதவ் அர்ஜூனாவின் அண்மைக்கால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருப்பதாக நிர்வாகிகள் கூறுவதால் விரைவில் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.