கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக மேல்பட்டாம்பாக்கம், பகண்டை, அழகியநத்தம், குண்டுஉப்பலவாடி கண்டக்காடு, நாணமேடு உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
அந்த இடங்களில் மத்திய உள்துறை அமைச்சக இணை செயலர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகின்றனர்.