திருச்சியில் இருந்து காரைக்கால் செல்லும் ரயில் படிக்கட்டில் பயணம் செய்த ஜெயக்குமார் என்பவர் தவறி விழுந்ததில் கை துண்டானது.
ரயில் புறப்படும் போது படியில் ஏறி இறங்கிய ஜெயக்குமார் நிலைத் தடுமாறி நடை மேடைக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டார்.
இதனையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பயணிகள்,பொதுமக்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் இணைந்து செல்போன் மற்றும் டார்ச் வெளிச்சத்தில் கை துண்டான நிலையில் ஜெயக்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.