சென்னை அண்ணாநகர் டவர் பூங்கா அருகே போலீசாருக்குப் பயந்து கல்லூரி மாணவர் காரை வேகமாக இயக்கியதில் அது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
18 வயதான அந்த மாணவர், காரை சாலையில் நிறுத்தி ஜன்னல் கண்ணாடிகளை மூடியவாறு தோழியுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது அங்கு வந்த போலீசார், காரின் கதவைத் தட்டி, நகர்ந்து செல்லுமாறு கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
போலீசாரைப் பார்த்ததும் பதற்றமடைந்த மாணவர் காரை வேகமாக இயக்கியபோது விபத்து நேரிட்டுள்ளது. இதில் பைக்குகள் சேதமடைந்த நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.