மேற்கு வங்க மாநிலம் ஹௌராவில் இருந்து திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பயணிகளிடம் ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் 75 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவர் உரிய ஆவணங்களின்றி பணத்தைக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தையும், அந்த நபரையும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.