கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் சார்பதிவாளரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்த நிலையில், அது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தான் புதிதாக வாங்கும் சொத்தை பதிவு செய்ய பொறுப்பு சார்பதிவாளர் ஹரிஷ்ஹரன் மறுத்ததாக கூறி ஜஸ்டஸ் மார்ட்டின் என்பவர் தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு அவர் மீதும் பெட்ரோலை ஊற்றி கொளுத்த முயன்றுள்ளார்.