கோவை சூலூரில் உள்ள பட்டணத்தில் கடையின் கல்லாப்பெட்டியைத் திறந்து 60 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றவரை சி.சி.டி.வி பதிவு அடிப்படையில் போலீஸார் தேடி வருகின்றனர்.
வீட்டின் முன்பகுதியில் ஸ்டேஷனரி கடை நடத்தி வரும் மோனிகாவிடம், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டு அவரது கவனத்தை திசை திருப்பி விட்டு இளைஞர் ஒருவர் பணத்தை திருடி விட்டு டூவீலரில் தப்பிச் சென்றார்.