திருவண்ணாமலை கோயில் தீபத் திருவிழாவிற்காக டிக்கெட், அனுமதி அடையாள அட்டை பெற்ற எவரும் வெளியே நிற்கும் நிலை இருக்காது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி உள்ளிட்டோர் பங்கேற்ற 3 ஆவது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கோயிலுக்குள் அனுமதிக்கப்படும் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்த பின்னரே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.