திண்டுக்கல் மாவட்டம், ஆயக்குடியில் மாருதி கார் விற்பனை ஷோரூமின் கண்ணாடியை உடைத்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய ஸ்விஃப்ட் காரை திருடிச் சென்ற நபரை, புகார் அளிக்கப்பட்ட 6 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
பழனி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஷோரூமில் இரவு 11 மணிக்கு மேல் சிசிடிவி கேமரா இணைப்புகளை துண்டித்துவிட்டு காரை திருடப்பட்டது.
ஷோரூமுக்கு அருகாமையில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து சிவக்குமார் என்பவரை கைது செய்து காரை மீட்டதாக போலீசார் தெரிவித்தனர்.