செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

“பார்க்காம இருக்க முடியல.. நண்பரின் ஆசைக்காக காதலி கொடூர கொலை..!

Dec 06, 2024 02:33:45 PM

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது வெண்ணந்தூர் கிராமத்தை சேர்ந்த 45 வயது பெண் கடந்த கடந்த 25 ஆம் தேதி சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு வருவதாக கூறிச் சென்றவர் மாயமானார்.

புகாரின் பேரில் சேலம் டவுன் காவல் நிலைய போலீசார் , அந்த பெண்ணின் செல்போன் நம்பரை வைத்து அவருடன் கடைசியாக பேசி இருந்த சேலம் கோரிமேடு, தாமரை நகர் பகுதியை சேர்ந்த பூண்டு வியாபரி கனகராஜை பிடித்து விசாரித்தனர்.இதில் அந்த பெண் மாயமான வழக்கில் திடுக்கிடும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

ஊர் ஊராக பூண்டு வியாபாரம் செய்து வந்த கனகராஜ் , வெண்ணந்தூர் சென்ற போது அந்தப் பெண் தனது செல்போன் நம்பரை கொடுத்து பழகி உள்ளார். இருவரும் ஏற்காடு மற்றும் கொல்லிமலைக்கு சென்று உல்லாசமாக சுற்றி திறிந்த நிலையில் தனது காதல் வாழ்க்கை குறித்து வெல்டிங் பட்டறை நடத்திவரும் தனது கூட்டாளி சக்திவேலுவிடம் தெரிவித்துள்ளார் கனகராஜ்.

கூட்டாளி சக்திவேல் யோசனைப்படி கடந்த 25 ஆம் தேதி கனகராஜ் , அந்தப்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு சேலத்திற்கு வரவழைத்துள்ளார். அவரை அழைத்துக் கொண்டு ஏற்காடு மலை அடிவாரம் , செக்போஸ்ட் பின்பக்கம் இருக்கும் அடர்ந்த காட்டு பகுதிக்கு சென்றுள்ளார் கனகராஜ் . அவர்களை கூட்டாளி சக்திவேலுவும் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

காதலர்கள் இருவரும் காட்டுப்பகுதியில் தனிமையில் இருந்த போது அங்கு சென்ற சக்திவேல் , அந்த பெண்ணிடம் அத்துமீறியுள்ளார். அவருடன் சண்டையிட்டு தப்பிச்செல்ல அந்த பெண் முயன்ற நிலையில், கனகராஜும் , சக்திவேலுவுடன் சேர்ந்து , அப்பெண்ணை கொடூரமாக தாக்கி பலாத்காரம் செய்து , கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்ததாக கூறப்படுகின்றது.

பின்னர் அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த கவரிங் செயினை தங்கம் என நினைத்து கழற்றி எடுத்துக் கொண்டு சடலத்தை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் வீசிவிட்டு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கனகராஜ் இது போல ஏராளமான பெண்களிடம் பழகி வந்தது செல்போன் தொடர்புகள் மூலம் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், கூட்டாளி சக்திவேலுவுடன் சேர்ந்து கனகராஜ் இது போன்று வேறு ஏதும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனரா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement
முனகல் சத்தம் கேட்ட திசையில் உயிருக்கு போராடிய பெண் வசமாக சிக்க வைத்த கருகமணி..! கொலையாளி சிக்கியது எப்படி
சட்டையை கழற்றி போர் பைக் டாக்ஸியால் வீதிக்கு வந்த ஆட்டோ ஓட்டுனர்கள்..! பைக் டாக்ஸியை ஆதரிக்கும் இளசுகள்
ஆம் வகுப்பு மாணவனின் கன்னத்தில் 5 முறை அறைந்த ஆசிரியர்
2ஆம் வகுப்புச் சிறுவனுக்கு கண் கருவிழியில் பாதிப்பு
அண்ணாமலையார் கோவிலில் வெள்ளிக்கிழமையன்று மகா தீபத் திருவிழா
திருட்டு, வழிப்பறி, சைபர் கிரைம் புகார்களில் மீட்கப்பட்ட பொருள், பணம்
த.வெ.க நிர்வாகிகளிடம் பிழைப்புக்கு உதவி கோரிய பெண்
மீனவ கிராமத்தில் கடல் அலையில் சிக்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு
வி.சி.க கொடிக் கம்பத்தை அகற்றச் சென்றவர்கள் மீது தாக்குதல்
அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வருகிறது

Advertisement
Posted Dec 12, 2024 in தமிழ்நாடு,Big Stories,

முனகல் சத்தம் கேட்ட திசையில் உயிருக்கு போராடிய பெண் வசமாக சிக்க வைத்த கருகமணி..! கொலையாளி சிக்கியது எப்படி

Posted Dec 12, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சட்டையை கழற்றி போர் பைக் டாக்ஸியால் வீதிக்கு வந்த ஆட்டோ ஓட்டுனர்கள்..! பைக் டாக்ஸியை ஆதரிக்கும் இளசுகள்

Posted Dec 12, 2024 in சென்னை,Big Stories,

தி. நகர் எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணியில் புழு கிடந்ததாக ஓட்டலில் வாடிக்கையாளர் ஆவேசம்..! ஆய்வு செய்து ஓட்டலை மூடிய அதிகாரிகள்

Posted Dec 11, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

“பெத்தராயுடு” வீட்டு வாசலில் போராட்டம் நடத்திய மகன் குடும்ப சொத்துக்காக அடிதடி ..! செய்தியாளர் மீது கடும் தாக்குதல்

Posted Dec 10, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தமிழ் புலியின்.. தந்திரம் வீணானது... அந்த “முடி”யையா.. எடுத்துப் போட்ட ?! “பரோட்டாவில் முடி ..” சிக்கியது எப்படி ? சேட்டையை காட்டிக் கொடுத்த சிசிடிவி..!


Advertisement