முதுகெலும்பு தசை நார் வலுவிழப்பு என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது 5 மாத பெண் குழந்தை 16 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்து செலுத்தப்பட்டால் தான் உயிர் பிழைக்க முடியும் என்பதால் தமிழக அரசும், பொதுமக்களும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியை சேர்ந்த மதியழகன் - சௌந்தர்யா தம்பதியின் குழந்தை வர்ணிகாஸ்ரீக்கு ஐந்து மாதங்கள் நிறைந்தும் தலை நிற்காததால், மருத்துவர்கள் செய்த ரத்த பரிசோதனையில் இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது.