செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

" நாங்க என்னய்யா பாவம் செய்தோம்..? "தண்ணீரை திறந்து ஊருக்குள் விட்டீங்க.. சாப்பிட கெட்டுப்போன உணவு தர்ரீங்க..? " இப்படியுமா பேரூராட்சி ஊழியர்கள்..?

Dec 05, 2024 09:54:41 PM

விழுப்புரம் மாவட்டம் அரகண்ட நல்லூர் பகுதியில் வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பூஞ்சை படிந்த கெட்டுபோன உணவு வழங்கப்பட்டதாக கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பெண்ணை யாற்றின் வெள்ளம் ஊருக்குள் பாய்ந்ததால் பெரும் பாதிப்பிற்குள்ளான அரகண்ட நல்லூர் மக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வீடு வீடாக சாப்பிட உணவு வழங்கப்பட்டது. பசியில் இருந்த பெண் ஒருவர் அதனை சாப்பிட திரந்து பார்த்த போது அது பூஞ்சை பிடித்து ஊசிப்போய் இருந்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அந்த பொட்டலம் தான் சரி யில்லை என்று அவர்கள் கொடுத்த அனைத்து சாப்பாட்டு பொட்டலங்களையும் திறந்து பார்த்த போது அவற்றில் இருந்த சாதம் கெட்டுபோன வாடை வீசுவதாக கூறி சாலையிலேயே திறந்து வைத்தனர்.

“ போகிற உயிர் பசியில போட்டும், கெட்டுப்போன உணவை சாப்பிட்டு விட்டு ஆஸ்பத்திரிக்கு அழைய நாங்கள் தயாரில்லை என்று ஆதங்கப்பட்டனர்.

உணவு வழங்க வந்த பேரூராட்சி ஊழியர்கள் சாப்பாடு பொட்டலங்களை திறந்து பார்த்து உணவு கெட்டுபோனதை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதையடுத்து பேரூராட்சி அலுவலகத்தில் மக்களுக்கு வினியோகிக்க அட்டைப்பெட்டிகளில் வைத்திருந்த ஆயிரக்கணக்கான உணவு பாக்கெட்டுகள் குப்பை லாரியில் ஏற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

இந்த உணவை அனுப்பி வைத்த திருவெண்ணை நல்லூர் பி.டி.ஓ பாலுவிடம் விசாரித்த போது, தனக்கு திருச்சியில் இருந்து புதன்கிழமை மாலை 5 மணிக்கு தயாராகி வந்த 1500 உணவு பொட்டலங்களை, இரவு 8 மணிக்கு மக்களுக்கு சாப்பிட கொடுக்குமாறு அனுப்பி வைத்ததாகவும், ஆனால் அரகண்ட நல்லூர் பேரூராட்சி ஊழியர்கள் வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு மேல் மக்களிடம் சாப்பிட கொடுத்ததால், அவை கெட்டு போயிருக்கும் என்றார்.

வெள்ளத்தால் ஏற்கனவே உடமைகளை இழந்து தவித்து நிற்கும் மக்களுக்கு சாப்பிடுவதற்கு தரமான உணவை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.


Advertisement
அரசு மருத்துவமனை வளாகத்தில் வேருடன் சாய்ந்த மரம்..
கார்த்திகை மாத பௌர்ணமிக்கு சதுரகிரி செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை..
ஏரியில் கொட்டப்படும் மாநகராட்சி குப்பைகள் - பொதுமக்கள் வேதனை
தொடர் கனமழை காரணமாக சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதாக விவசாயிகள் கவலை..
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை.. மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை
திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
செங்கல்பட்டு புதுப்பட்டினம் பகுதியில் கரை ஒதுங்கிய மூங்கில் மிதவை குறித்து போலீசார் விசாரணை
என்.எல்.சி நிலக்கரி சுரங்க விவகாரத்தில் முதல்வர் மாற்றாந்தாய் மனப்பான்மை - அன்புமணி
கன்னியாகுமரி சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதிக்கு ஆளுநர் வருகை

Advertisement
Posted Dec 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

முனகல் சத்தம் கேட்ட திசையில் உயிருக்கு போராடிய பெண் வசமாக சிக்க வைத்த கருகமணி..! கொலையாளி சிக்கியது எப்படி

Posted Dec 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சட்டையை கழற்றி போர் பைக் டாக்ஸியால் வீதிக்கு வந்த ஆட்டோ ஓட்டுனர்கள்..! பைக் டாக்ஸியை ஆதரிக்கும் இளசுகள்

Posted Dec 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

தி. நகர் எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணியில் புழு கிடந்ததாக ஓட்டலில் வாடிக்கையாளர் ஆவேசம்..! ஆய்வு செய்து ஓட்டலை மூடிய அதிகாரிகள்

Posted Dec 11, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

“பெத்தராயுடு” வீட்டு வாசலில் போராட்டம் நடத்திய மகன் குடும்ப சொத்துக்காக அடிதடி ..! செய்தியாளர் மீது கடும் தாக்குதல்

Posted Dec 10, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தமிழ் புலியின்.. தந்திரம் வீணானது... அந்த “முடி”யையா.. எடுத்துப் போட்ட ?! “பரோட்டாவில் முடி ..” சிக்கியது எப்படி ? சேட்டையை காட்டிக் கொடுத்த சிசிடிவி..!


Advertisement