சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பெண்ணிடம் ஏழரை சவரன் சங்கிலியை அறுத்த கும்பல் தலைவனான வானியங்குடி சங்கர், கை, கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஒய்யவந்தான் பாலத்தில் இருந்து குதித்தபோது, எலும்பு முறிவு ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. சங்கரின் கூட்டாளிகளான துரைசிங்கம், லெட்சுமணன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.