விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் வழங்கிய உணவு கெட்டுப் போய், பூஞ்சை படர்ந்து உள்ளதாக வள்ளலார் மற்றும் திருவள்ளுவர் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மொத்தமாக உணவு தயாரிக்கப்பட்டு அனுப்புவதாக அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், கெட்டுப்போன உணவுகளை பேரூராட்சி ஊழியர்கள் பெட்டிப் பெட்டியாக வண்டிகளில் எடுத்துச் சென்று அழித்தனர்.