மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் புதுச்சேரி இடையார்பாளையம் பகுதியில் உள்ள ஆற்றுப்பாலம் உள்வாங்கி சேதம் அடைந்தது.
இதனால், கடலூர்-புதுச்சேரி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிந்ததும், முதலமைச்சர் ரங்கசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் உள்ளிட்டோர் சேதத்தை நேரில் பார்வையிட்டு பாலத்தை உடனே சீரமைக்க உத்தரவிட்டதையடுத்து, சீரமைப்புப் பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சாலையுடன் பாலம் இணையும் இடத்தில் மணல் அரிப்பு ஏற்பட்டு பாலம் உள்வாங்கியதாகக் கூறப்படுகிறது. பாலம் சேதம் அடைந்ததால் மாற்றுப்பாதையில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளது.