சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி நீர்த்தேக்கத்துக்கான நீர்வரத்து விநாடிக்கு 4 ஆயிரத்து 360 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர் இருப்பு ஆயிரத்து 810 மில்லியன் கனஅடியாக உள்ளது.
புழல் ஏரிக்கான நீர்வரத்து 209 கனஅடியாக குறைந்துள்ள நிலையில், ஓரிரு நாள்களில் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.